தென்காசி மாவட்டம் தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3 – வது பொதிகை புத்தக திருவிழாவின் துவக்க விழாவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்கள்
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் , மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்விச்சேவைகள் கழகம் சங்கர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அமைச்சர் உள்ளாட்சித் துறை மற்றும் துணை முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நூலகங்களை உருவாக்கித் தந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சரைதான் சாரும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கி வருவதன் மூலம் அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் பயனடைந்து வருகின்றனர். பெண் கல்வியை ஊக்கப்படுத்திடும் பொருட்டு டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் திருமண உதவித் தொகை திட்டத்தினை செயல்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மாணவியர்களும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதனை உருவாக்கிடும் பொருட்டு புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தி மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தலைசிறந்த திட்டமாக புதுமைப்பெண் திட்டம் திகழ்ந்து வருகிறது. அதனடிப்படையில் இல்லம் தேடி கல்வி திட்டம் ஆரம்பப்பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம், நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல் திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் போன்ற பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் கண்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் மூன்றாவது பொதிகை புத்தகத் திருவிழா துவக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத் திருவிழா (15.11.2024 ) முதல் (24.11.2024) வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ மாணவியர்களை அறிவு சார்ந்த சமுதாயமாக உருவாக்கிடும் பொருட்டும் அவர்களது கல்வித் தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு நூலகத்தில் நாம் படிப்பதன் மூலம் நமது அறிவுத்திறன் மற்றும் சிந்தனைத் திறன் ஊற்றாக எடுக்கும்.
இப்புத்தகங்களை வாசிக்கின்ற போது அறிஞர்களுடைய புத்தகங்களும், நமது தமிழறிஞர்கள் எழுதிய புத்தகங்களும், எழுதிய கவிதைகளும், அவரவர்களுக்கு எதிர்காலத்தில் ஒருவிதத்தில் ஒரு துறையில் பயன் உள்ளதாக அமையும். நூலகங்களில் இந்தியாவிலேயே தலைசிறந்த நூலகமாக கன்னிமாரா நூலகம் ஒரு காலத்தில் போற்றப்பட்டது. ஆனால், டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட நூலகம் ஆசியாவிலேயே சிறந்த நூலகத்தினை உருவாக்கிய பெருமை டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞரைத்தான் சாரும். சென்னையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் ஒரு புதிய நூலகத்தினை நிறுவி பெரிய மேதைகளை உருவாக்கித் தந்து அனைத்து மாணவ, மாணவியர்களும் கல்வி பயில்வதற்கு இந்நூலகம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்றைக்கும் இந்நூலகம் உயர்ந்து நிற்கிறது. டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் சமூகத்திற்காக தமிழ், தமிழ்நாடு, தமிழகம், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், அரசியல் அனைத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்து தலைசிறந்து விளங்கியதை நாடு நன்றாக அறியும். இன்றைக்கு உலக மொழியாக இருக்கக்கூடிய தமிழ் மொழியில் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் அவர்களுக்கு கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலையை வானுயரத்திற்கு அமைத்துத் தந்தவர் டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். புத்தகங்களை நாம் படிப்பதன் மூலம் நமது அறிவினையும் நமது திறனையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இப்புத்தகத்திருவிழாவில்பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பட்டிமன்றங்கள், சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறவுள்ளது. மேலும் இப்புத்தகத்திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள், 10-க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த அரங்குகள், பாரம்பரிய உணவக அரங்குகள், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெறவுள்ளது.
மாணவ, மாணவியர்களுக்கு கல்வி பயில்வது ஒன்றே சிறந்த செல்வமாகும். எனவே பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 10 தினங்கள் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு அறிவு சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் வாங்கி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்து புத்தகத்திருவிழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, நூலகத்துறை, காவல்துறை, தமிழ் வளர்ச்சித்துறை போன்ற துறைகளின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட தென்னிந்திய புத்தக விற்பானையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன், தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர், கனகராஜ் முத்துப்பாண்டியன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.