நாகர்கோவில் ஆக 10
குமரிமாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களைஇரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டநகல் எரிப்பு போராட்டம் மாவட்ட செயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்க்கு தோவாளை தாலுகா செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் ஆரல் கிளை பொருளாளர் சி. வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை விளக்கி அகில இந்திய வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் தோழர் கே. கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினார்.
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் பி. தாமரைசிங் துவக்கி வைத்தார். போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தக்கலை ராஜ், எஸ். கே. கங்கா, கே. செல்வராணி, தோழர் சுகுமாரன் தோழியர் சுதாமதன், மாவட்டதுணைச்செயலாளர் தோழர் எஸ். அனில்குமார், ஜி. சுரேஷ் மேசிய தாஸ் வடக்கு தாமரைகுளம் வி. அருணாச்சலம் ஆரல் புஷ்பராஜ், சுப்பிரமணியம் உள்ளிட்ட திராளான தோழர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.