நாகர்கோவில் ஜன 14,
டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி மிரட்டி ரூபாய் 70,00,000/- மற்றும் ருபாய் 26,54,047/- மோசடியாக பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றியதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு புகார் மனுக்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் படி, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். விசாரணையில் குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மேற்ப்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சொர்ணராணி தலைமையில் தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.
இந்த வழக்குகளில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த வினோத் தாஸ் என்பவரின் மகன் கிஷன் தாஸ்(19), சுலாகி தாஸ் என்பவரின் மகன் ஜிவெட் குமார்(28) மற்றும் ஜெய்சிங் என்பவரின் மகன் சுரேஷ் குமார்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.