தஞ்சாவூர். டிச.15
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.12 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது..
நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நடவு செய்யப் பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை யினால் 1,142 எக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது
கூட்டுறவு துறை சார்பில் 2024- 25 ஆம் ஆண்டுக்கு ரூபாய் 585 கோடி கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் இதுவரை ரூபாய் 375 கோடியே 92 லட்சம் கடன் வழங்கப் பட்டுள்ளது .அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 5,585 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 185 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 297 டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் 25 ஆயிரத்து 986 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் இதற்காக விவசாயிகளுக்கு ரூபாய் 307 கோடி வங்கி பணபரிவர்த்த னை செய்யப்பட்டுள்ளது
குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கடந்த அரவை பருவத்தில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 123 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 59 கோடியே 59 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊக்கத்தொகை ரூபாய் 2.12 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
மின்வாரியம் சார்பில் பழுதான மின் மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன் கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயசீலன், கூட்டுறவு சங்கங்க ளின் இணை பதிவாளர் தமிழ் நங்கை ,வருவாய் கோட்டாட்சியர் கள் இலக்கியா, ஜெயஸ்ரீ மற்றும் அதிகாரிகள் ,விவசாயிகள் கலந்து கொண்டனர்.