சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நாழிக்கல்பட்டி ஊராட்சியில் கொழிஞ்சிப்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து பராமரிப்பு வேலைக்காக 3. 1/2 லட்சம் மதிப்பீடும் மற்றும் சின்ன கொழிஞ்சிபட்டியில் சுற்றுச்சுவர் அமைக்க 10 லட்சம் மதிப்பீட்டிலும் பூமி பூஜை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.உடன் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கமலா கருப்பண்ணன், கலாமணி கோவிந்தராஜ், குணசேகரன் ,ஜூசப், பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.