தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 122வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெ ஜெ நகர் கிங் மேக்கர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 2ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் டேவிஸ்புரம் முதல் தருவைகுளம் சாலையில் நடைபெற்ற போட்டிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தேன்சிட்டு 12 ஜோடி மாட்டுவண்டி 4 மைல் தூரம் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற தேன்சிட்டு அணிக்கு முதல்பரிசு ரூ 11001 மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், இரண்டாம் பரிசு ரூ 9001 தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பாணிமுத்து தேவர், 3ம் பரிசு ரூ 7001 ராஜா, 4ம் பரிசு 4121 ராயல் தினேஷ், ஆகியோர் வழங்கினார்கள்.
பூஞ்சிட்டு 38 ஜோடி மாட்டுவண்டி 6 மைல் தூரம் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற பூஞ்சிட்டு அணிக்கு முதல்பரிசு ரூ 17001, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், இரண்டாம் பரிசு ரூ 15001 சுதாகர், 3ம் பரிசு ரூ 13001 சுந்தர், 4ம் பரிசு ரூ 4001 தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆகியோர் பரிசு தொகையை வழங்கினார்கள்.
முதல் கொடி வாங்கும் சாரதிகளுக்கு தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், வீரமணி நாடார், குமார்ஜி, ராஜா ரூ1000ம், ஆகியோர் வழங்கினார்கள்.
விழாவில் தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர் ராஜாமணி, முன்னாள் ஓன்றிய கவுன்சிலர் வில்சன், தொழிலதிபர்கள் குமார்ஜீ, ராஜா, அந்தோணி விமல்நாடார், ஆ.சண்முகபுரம் இளைஞர் அணி தலைவர் பாஸ்கர் நாடார், பொன்ராஜ் தேவர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.