தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழாவை மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட வேலு நாச்சியாரின் உருவப்படத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வணிகர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். இதில் மாவட்ட செயலாளர் NSO தளபதிஅமீன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் அறிவரசன்,மாவட்ட நிர்வாகிகள்
மில்டன், முரளி,
சிரஞ்சீவி, மாணவ அணி தலைவர் பிரபஞ்சன்,
தொண்டர் அணி தலைவர் தினேஷ்,
பாரி,
ஒன்றிய தலைவர்கள்,
மனோகரன்,
கமல்,
ராஜா,
ரவி,
ஆசிப்,
அம்பேத்கர் ஆகாஷ், மணி ஹரிஹரன், மற்றும் மகளிர் அணி
சுஸ்மிதா, அர்ச்சனா,ரம்யா,தனம், பிரியங்கா, ஐஸ்வர்யா, தமிழ்கனி, பவித்ரா, கலையரசி,காவியா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.