போச்சம்பள்ளி, அகரம் கிராமத்தில் பி.ஜே.பி யை சேர்ந்த 29 பேர் கைது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. கோயில் மற்றும் தர்காவுக்கு பக்தர்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் மாறி, மாறி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தது.இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை (பிப்.4) இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்பினர் அறப்போராட்டத்துக்கு அழைப்பை விடுத்தனர்.இதற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் காவல் துறையில் மனு கொடுத்தனர்.சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீஸ் அனுமதியை மறுத்து அறிக்கை வெளியிட்டது. உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதை எதிர்த்து பிஜேபியினரை இந்து அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆங்காங்கே வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ள நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் பி.ஜே. பி சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பர்கூர் டிஎஸ்பி தலைமையில் ஒப்பதுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர் அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு வந்த போச்சம்பள்ளி மற்றும் அகரம் கிராமத்தில் 29 பேர் பி.ஜே.பி.யை சேர்ந்தவர் போலீசார் கைது செய்தனர்.