திருப்பத்தூர்:ஜன:02, திருப்பத்தூர் அடுத்த அவுசிங்போர்டு அமிர்தா மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு சிறப்பு இசை விழா மற்றும் மறைந்த தமிழ்நாடு கலைத்துறை அலுவலர் பா.ராஜ்குமார் எம்.ஏ., அவர்களின் புகழஞ்சலி விழா திருப்பத்தூர் மாவட்ட நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் சங்கத்தினர் சிறப்பாக நிகழ்த்தினார்கள்.
இலங்கை, பெங்களூர், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய பல்வேறு மாநிலங்களிலிருந்து தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து இசைத்தனர்.
இந்த இசை விழாவிற்கு நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புதுப்பூங்குளம் கலைச்சுடர் மணி சுதாகர், தலைவர் பாப்பானுர் ஆனந்தன், பொருளாளர் குறும்பேறி குட்டி (எ)பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அஇஅதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் கே சி வீரமணி, நகர கழக செயலாளர் T.T.குமார், ஒன்றிய கழக செயலாளர் கால்நடை மருத்துவர் திருப்பதி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பேசுகையில்: அஇதிமுக ஆட்சி காலத்தில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு ஓய்வூதி துணையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் விலைவாசி உயர்வின் அடிப்படையில் எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை. திருப்பத்துரை மாவட்டமாக கொண்டு வருவதற்கு பல்வேறு சிரமத்திற்கு உள்ளாக இருந்து பாடுபட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை மாவட்ட வளர்ச்சிக்காக தற்போது உள்ள ஆட்சி எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. மேலும் தவில், நாதஸ்வர இசை கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக ஆட்சி அமையப் பெற்றால் கலைஞர்களின் ஓய்வூதியத் தொகை ரூபாய் 6000 ஆக அறிவிக்கப்படும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ளடக்கிய கலைப் பண்பாட்டு துறை மண்டலம் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் காஞ்சிபுரம் மண்டலத்தின் அலுவலகத்திற்கு சென்று வர வெகு சிரமத்திற்கு ஆளாகின்றனர் ஆதலால் நமது ஆட்சி அமையும் போது தக்க பரிசீலனை செய்து திருப்பத்தூர் மையப் பகுதியினை கொண்டு கலை பண்பாட்டு துறை அலுவலகம் அகக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள ஆட்சியாளர்கள் இசைக்கலைஞர்களுக்கு பேருந்து பயணத்தில் 50 சதவீதம் கட்டணம் செலுத்தி பயணம் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள் அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலைஞர்களை அலைகழிக்கிறார்கள், இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மூத்த கலைஞர்களுக்கு என அனைவருக்கும் இலவச பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு பகல் பாராமல் உழைக்கும் இசை கலைஞர்களின் நலனுக்காக காப்பீடு திட்டத்தை முதன் முதலில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்து ரூபாய் 75 ஆயிரம் அறிவித்த நிலையில், தற்போது ஆட்சி அமையும் நிலையில் 5 லட்சமாக காப்பீடு தொகை அறிவிக்கப்படும். நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெருக்குவதற்கு உறுதுணையாக இருப்போம். குறிப்பாக ஆகிய அதிமுக ஆட்சி காலத்தில் நான் கலை பண்பாட்டு துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பண்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தபோது இசைக்கலைஞர்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதோடு நிறைவேற்றி உள்ளோம். ஆகவே நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் வளர்வதற்கு என்றும் துணையாக இருப்போம் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மங்கல இசை சுருதி லயஞான நாதஸ்வர கலைச்சுடர்மணி பிரகாசம், வேலூர் தவில் கலைவளர்மணி ஜெயபிரகாஷ், நாதஸ்வரம் கார்த்திகேயபுரம் சுரேஷ், மந்தைவெளி தவில் இளம் சுடரொளி மோகன்ராஜ் ஆகியோர் மங்கள இசையும், ஆஸ்தான விதுவான் தத்தனூர் சகோதரர்கள் பெங்களூர் T.M.வெங்கடேஷ் T.M.முனிராஜ் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், சிறப்பு தவிள்கள் தவில் சொர்சுவை செல்வம் லயஞான செல்வம் லய ஸ் சாரதா ஸ்ரீலங்கா R.V.S. ஸ்ரீகாந்த் அவர்களின் சிறப்புத் தவிலும், தாளலய தவில் சாம்ராட் லய ஸ்வரூப மாமணி பாண்டிச்சேரி K.L. பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர தவில் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அன்பு தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை குழு, மாவட்ட நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பல்வேறு ஊர்களில் வருகை தந்த தவில் நாதஸ்வர கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புதுப்பூங்குளம் கலைச்சுடர்மணி சுதாகர் நன்றியுரை ஆற்றினார்.