திண்டுக்கல், பிப்ரவரி1
திண்டுக்கல் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்க பேரவை சார்பாக சமூக நீதிப் போராளி பழனிபாபா அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம் திப்பு சுல்தான் திடலில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சாகுல் ஹமீது நகரச் செயலாளர் சமூகநலலிணக்க பேரவை தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் மைதீன் பாவா முன்னிலை வகித்தார். பழனி பாவா அவர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாவரசு முதன்மைச் செயலாளர் மற்றும் கனியமுதன் துணை பொதுச்செயலாளர் எழுச்சி உரையாற்றினர். தமிழ்வாணன் மண்டல செயலாளர், அன்பரசு மண்டல துணைச் செயலாளர் மற்றும் திருச்சித்தன் மாநில துணைச் செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுக் கூட்டத்தில் சவரியம்மாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர், திவ்யா மகளிர் அணி துணை செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் பெர்னா , ஹைதர் அலி, பால்ராஜ், ஸ்வீட் ராஜா, யுவராஜ், செல்வம் மற்றும் சிறுமணி, மைதிலி, பர்கீஸ்,உமல் பரிதா உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.