திருநெல்வேலி டிச 20
நெல்லை மாவட்டம் இடிந்தகரை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 28 பேர் ஈரான் நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்று பஹ்ரைன் நாட்டு கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகவல் அறிந்த நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அவர்களை மீட்பதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக கொடுத்ததின் பலனாக அவர்கள் விடுவிக்கப்பட்டு. தாயகம் திரும்பினர். தாயகம் திரும்ப வழிவகை செய்த ராபர்ட் புரூஸ் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். விமான நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் தமிழ்செல்வன், மோகன் குமார ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராம் சிங், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சசிக்குமார்,விவேக் முருகன்,வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெனித், குமரி ஜெயச்சந்திரன்,விஸ்வம், சிவக்குமார்,சுகன், நாகர்கோவில் அலுவலக பொறுப்பாளர்கள் வைகுண்ட தாஸ், விஜய் உட்பட பலர் வரவேற்றனர்.