சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தின விழா ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து சுதந்திரத்திற்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன்,மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் புனிதா ,மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், பொன்முத்தையா பாண்டியன், பெரியதுரை, வெள்ளத்துரை, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி , பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியன்,மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் வக்கீல் அணி பிச்சையா, நெசவாளரணி சந்திரன், சிறுபான்மையினர் அணி நாகூர்கனி , அமைப்பு சாரா ஓட்டுநர் கணேசன், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி ராஜராஜன், கார்த்தி, தொண்டரணி ராஜவேல்ரத்தினம், மாணவர் அணி வீரமணி மற்றும் அஜய்மகேஷ்குமார், கார்த்தி, ஜெயக்குமார், பிரகாஷ் ,பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்