திருப்பூர் ஆகஸ்ட்.1
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 கடைகள் மூடப்பட்டு ரூ.7 1/4 அபதாரம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும்
உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி
Dr. விஜயலலிதா ம்பிகை மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஊராட்சி துறையினர் காவல் துறையினர் கடந்த 25 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் அருகில்
டாஸ்மாக் பார் அருகில் மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் மளிகை கடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 26 கடைகள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது சம்பந்தப்பட்ட 26 கடைகளையும் பூட்டி கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.7 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு அபதார தொகையை தமிழக அரசு கருவூலத்தில் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலமாக செலுத்தினர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் பெட்டிக்கடை டாஸ்மாக் பார் மதுக்கடை அருகே உள்ள பெட்டிக்கடைகள் மதுக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ச் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். TN-foodsafetyconsumerApp என்ற செயலிலும் புகார்களை பதிவேற்றம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.