தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிக்கும் குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டை விநாயகர் கோவில் அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டும் பணிக்கும் கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கும் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் அடிப்படை வசதிகள் குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டறிந்தார்.
மேலும் நடுக்கூடங்காடு ஊராட்சி பொதுமக்கள் 100 நாள் வேலை சரியாக கிடைக்கவில்லை எனவும் சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர் தொடர்ச்சியாக எம்எல்ஏ அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நடுக்கூட்டுடன்காடு கண்மாயில் மதகு ஷட்டர் பழுதான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கை அடுத்து அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ அதையும் புதிதாக அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகோர்ட் ராஜா துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.