தஞ்சாவூர் ஜூன் 10
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல் கள் திறக்கப்பட்டு எண்ணப் பட்டதில் பக்தர்கள் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை செலுத்தி இருப்பது தெரிய வந்தது.
கோவிலில் உள்ள மொத்தம் 11 உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படும் இந்நிலையில் ஏழு உண்டியல்கள் இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் சூரிய நாராயணன் உதவி ஆணையர் கவிதா செயல் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.
.இப்பணியில் வங்கி ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர் இதன்மூலம் ரூபாய் 26 லட்சத்து 98 ஆயிரத்து 967 காணிக்கையாக செலுத்தி இருப்பது தெரிய வந்தது .மேலும் 210 கிராம் வெள்ளியும், இருபத்தி நான்கரை கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தப் பட்டுள்ளன