கன்னியாகுமரி நவ 29
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா ஜனவரி 1ம் தேதி நடைபெற நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை, கடந்த 2000-ஆவது ஆண்டு ஜன.1-ம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழக அரசு சாா்பில் வருகிற ஜன.1-ம் தேதி கன்னியாகுமரியில் வெள்ளி விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை திறந்து வைக்கிறாா்.
இதையொட்டி பாதுகாப்பு கருதி திருவள்ளுவா் சிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.