சென்னை, செப்டம்பர்-18,
சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழாவில் ஆட்டிசம் நோய் பாதித்த இளைஞர்கள் முன்னேற்றம், கற்றல் மையம் குறித்தும் சுயசார்பு பொருளாதாரத்தை பெறுவதைக் குறித்தும் கருத்தரங்க மாநாடு சென்னையில் நடைபெற்றது .
இது குறித்து சிறப்புக் கல்வி நிறுவனர் ,இயக்குனர் டாக்டர் .சுலதா அஜித் பேசுகையில்,தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 1,79,963 குழந்தைகள் சிறப்பு தேவைகளுக்கு ஆளாகி உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது .
சங்கல்ப் தொடங்கிய 1999 ஆம் ஆண்டில் இதுபோன்ற சிறப்பு பள்ளிகள் குறைவாக இருந்தது . தற்போது அதிக எண்ணிக்கையில் உள்ளது எனினும் நகரத்தின் தேவைகளை அது பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. எங்கள் பள்ளியில் மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய பொருளாதார பின்னணியில் இருந்து வந்தவர்கள் எனவே கல்வி மற்றும் சிகிச்சை செலவுகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது .
சங்கல்ப் திறந்த நிலைப் பள்ளி ஷெனாய் நகரில் அமைந்துள்ளது இதில் 8 வயதுக்கு மேற்பட்ட 100 மாணவர்கள் பயில்கின்றனர் .மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினரால் நடத்தப்பட்டு வரும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவன பாடத்தை இது பின்பற்றுகிறது .1: 8 என்ற மாணவர்,ஆசிரியர் விகிதம் மூலம் ஒவ்வொரு குழந்தையின் குறிப்பிட்ட கற்றல் தேவையை பூர்த்தி செய்கிறது .மேலும் பூந்தமல்லியில் 1.35 ஏக்கர் பரப்பளவில் தற்போது 153 மாணவர்களும் 23 ஆசிரியர்களும் உள்ளனர் . இங்கு டி.டீ.பி, ஆபிஸ் ஆட்டோமேஷன், தையல் பயிற்சி, கைவினை கலை, சமையற்கலை ஆகிய துறைகளில் திறன் மேப்பாட்டு கான 2 ஆண்டு சான்றிதழ் பாடத்திட்டத்தையும் வழங்கி வருகிறது. இவர்கள் கற்றலில் தேர்ந்து சுயசார்புடன் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய திறனை வளர்ப்பதே எங்கள் நோக்கமாகும் என்று அவர் பேசினார்.