தஞ்சாவூர் அக்.16.
வடகிழக்கு பருவ மழையையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவாரண மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம்.
வடகிழக்கு பருவ மழை பொட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுட னான பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை யில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்ற னர். பொதுமக்கள் வடகிழக்கு பருவ மழை தொடர்பான பாதிப்பு கள், கோரிக்கைகளை கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 தொலைபேசி எண் 04362 – 230121, வாட்ஸ் அப் எண் 9345088997 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பல நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் , 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 50 படகுகள், 67 கனரக இயந்திரங்கள், 378 அறுவை இயந்திரங்கள், 68 மரம் வெட்டும் இயந்திரங்கள், 72 ஜெனரேட்டர்கள், 42 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள் , 91,985மணல் மூட்டைகள், 30,755
தடுப்பு கம்பிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மேலும் 4,550 முதல் நிலை பணியாளர்கள் ,ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் 300 முதல் நிலைபணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தீயணைப்பு துறையில் ரப்பர் படகுகள் ,உள்ளிட்ட நவீன சாதனங்கள் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து கழிவுநீர் வாய்க்கால் களும் அடைப்புகள் ஏதுமின்றி தண்ணீர் தேங்காதவாறு சுத்தம் செய்ய வேண்டும் .அனைத்து பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு கீழ் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் .தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு தேவை யான தடுப்பு நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.