தருமபுரி மாவட்டத்திலுள்ள 251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தருமபுரி யூனியன் கடகத்தூர் பஞ்சாயத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பராமரித்து தூய்மையாக வைத்துக் கொண்டால் சிறந்த பஞ்சாயத்துக்கான விருதினை பெரும் வாய்ப்பினை அனைத்து பஞ்சாயத்துகளும் பெறலாம் என்றும் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அயோலின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பஞ்சாயத்தின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-2026 குறித்து விவாதித்தில் உள்ளிட்ட பல்வேறு இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், டி.ஆர்.ஓ. கவிதா, ஆர்.டி.ஓ. காயத்ரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சாகுல் ஹமீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, சத்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலக கலந்து கொண்டனர். இலக்கியம்பட்டி, சோகத்தூர் பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கருப்பு மேட்ச் அணிந்து வந்து நகராட்சியுடன் பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை பஞ்சாயத்தில் உள்ள காலபைரவர் மற்றும் சென்றாய சுவாமி, சோமேஸ்வரர் கோயில்களின் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics