ஸ்ரீவில்லிபுத்தூர்
கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா , கலசலிங்கம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி தலைவர் கே.ஸ்ரீதரன் கல்லூரியில் 2021-24 ல் பயின்ற பி.ஏ , பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ , எம்.காம்,எம்.எஸ்.சி மாணவர்கள் மொத்தம்418 பேருக்கு. பட்டங்களையும், பல்கலை தேர்வு தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 9 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி உரையாற்றினார்.
கல்லூரி செயலாளர் டாக்டர். எஸ்.அறிவழகி
ஸ்ரீதரன் பேசுகையில் “மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய தொடர்ந்து,கடின உழைப்புடன் படிக்க வேண்டும் ” என்று அறிவுரை வழங்கினார்.விழா ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.