வேலூர்=23
வேலூர் மாவட்டம் ,வேலூர் வேலப்பாடி சேர்வை முனிசாமி நகர் வள்ளலார் இராமலிங்கம் மழலையர் தொடக்க பள்ளியில் 24ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்கள் வேலூர் மாவட்டம் சமூக நல சேவகர் ஆர்.உமா ,மாமன்ற உறுப்பினர் எழிலரசன் , உடன் தலைவர் கோ.பாண்டியன் , செயலாளர் வீ.இராசேந்திரன், தாளாளர் மற்றும் பொருளாளர் கு.கணேசன், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.விழாவில் மாணவர்கள் தங்கள் சிறுசேமிப்பில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு தங்கள் படித்த பள்ளிக்கு மின்விசிறியை நன்கொடையாக மாணவர்கள் பள்ளியின் தலைவரிடம் வழங்கினர்.பள்ளின் மாணவர்களுக்கு மிகவும் தேவையானதாக இருக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வழங்கியதிற்காக பள்ளியின் சார்பில் மாமன்ற உறுப்பினர் எழிலரசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.