கரூர் 13.07.2024
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் 2403.07 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.16.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பாக விளை நிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பனிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல், இன்று (13.07.2024) செய்தியாளர்கள் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்விற்குப் பின் மாவட்ட ஆட்சித்தலைவர்.மீ.தங்கவேல் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண் பெருங்குடி மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இத்தகைய திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சித்தலவாய் கிராமம் முனையனூரில் விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கோ-32 இரக சோள விதைப் பண்ணையில் , தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்-ஊட்டச் சத்து மிக்க சிறு தானியங்கள் 2024-25 திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு எட்டு ரூபாய் ஊக்கத் தொகையாக என மொத்தம் ரூ.24,000 மதிப்பீட்டில் மானியமாக வழங்கப்படவுள்ளது .
மேலும் விவசாயி தனது பயிர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து வேளாண்மைத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் இரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்துவதையும்,
பசுமை போர்வை திட்டத்தின் மூலம் முனையனூரில் விவசாயி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள 400 தேக்கு மரக் கன்றுகளை பராமரிக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு கள அய்வு மேற்கொள்ளபட்டது.
அதனைத் தொடர்ந்து,
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மாநில தீவன அபி விருத்தி திட்டத்தில் – புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 140 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி வழங்கப்படடுள்ளது. இவற்றில் மேட்டுதிருக்காம் புலியூர் கிராமத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் பயன்பெற்றதையும்,
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பாக பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் புதுப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் பயிரிடப்பட்ட மரவள்ளி பயிருக்கு ரூ.46,554 மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டுள்ளதையும் மற்றும் மஹாதானபுரம் தெற்கு, புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் 0.63 எக்டர் பரப்பில் பயிர் மூடாக்கு முறையில் பயிரிடப்பட்ட தர்பூசணி பயிருக்கு ரூ.81,076 மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவப்பட்டுளையும்,
விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் மூலம் கிருஷ்ணராயபுரம் வட்டாரம் மகாதானபுரம் (வடக்கு) கிராமத்தில் வேளாண் விளை பொருட்களை விட தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், பழங்கள் விரைவில் அழுகக் கூடிய நிலையில் உள்ளதால்,
மிகவும் அதிகமாக அறுவடைக்கு பின் இழப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட இழப்பை குறைக்கும் விதமாக விவசாயிகளுக்கு இதற்கான கட்டுமான பணியை ஏற்படுத்தி தரவும், காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுக்கவும், விவசாயிகள் அதிக இலாபம் பெறும் நோக்கத்திலும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் அனைத்து விதமான கட்டுமான வசதிகள் செய்து தரும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மையத்தில் வாழை, முருங்கை மற்றும் மா போன்ற வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டுவதற்கான இயந்திங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும்,
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைக்கும் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டில் பிள்ளப்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரினை இறைப்பதற்கு சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டு அமைத்து மொத்தம் ரூ.5.08 இலட்சம் மதிப்பீட்டில் நீர்பாசன வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதையும்,
நிலத்தில் விழும் மழை நீரினை வீணாக்காமல் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு 100 சதவீத மானியத்தில் ரூ.1.34 இலட்சம் மதீப்பிட்டில் பண்ணைக்குட்டையும் அமைத்துத்தரப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்யப்பட்டது .
மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த 2023 – 24 ஆம் நிதியாண்டில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக 1062.2 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.9.71 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக 1340.87 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 2403.07 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.16.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சித்தலைவர் .மீ.தங்கவேல் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண்துறை துணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, உதவி இயக்குனர்கள் மணிமேகலை (விதைச்சான்று), அரவிந்தன் (வேளாண்மை) மற்றும் செய்தியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.