ஆரல்வாய்மொழி, அக்.31:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரேசிங் செல்ல தயாராக இருந்த 24 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது முகநூல் மூலம் போட்டிக்கு தயாராக இளைஞர்கள் வந்தது தெரிய வந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ரேசிங் போட்டி நடத்துவதாகவும் இதனால் அந்த இளைஞர்கள் விபத்தில் படுகாயம் அடைவதுடன் மரணமும் நிகழ்கிறது.இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது குறிப்பாக காவல்கிணறு கன்னியாகுமரி நான்கு வழி சாலை மற்றும் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலைகளில் பல இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ரேசிங் போட்டியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்த நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது சுமார் 24 இளைஞர்கள் ரேசிங் பைக்கில் காவல்கிணறு நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் குமாரபுரம் சந்திப்பு அருகே உள்ள சோதனை சாவடி அருகே ஒன்று கூடி நிற்பதாகவும் ரேசிங் செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்திய போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முகநூல் மூலம் இந்த ரேசிங் போட்டியில் ஈடுபடுகின்ற இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டு போட்டி நடக்கின்ற இடத்திற்கு வருவதாக தெரிய வந்தது. இதுபோன்று பல பகுதிகளிலும் இப் போட்டியில் ஈடுபடுகின்ற இளைஞர்கள் முகநூல் மூலம் தொடர்பு கொண்டு போட்டிகளில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி, பணக்குடி, வள்ளியூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய ரேசிங் பைக்கை கொண்டு வந்து போட்டியில் ஈடுபட தயாராக இருந்தது தெரிய வந்தது உடனடியாக போட்டிக்கு பயன்படுத்த தயாராக இருந்த அந்த 24 ரேசிங் பைக்குகளை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்