ராமநாதபுரம், டிச.31-
ராமநாதபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 15 பெண்கள் உட்பட 217 பேர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலை மாணவிக்கு இழைத்த அநீதியை கண்டித்து அதிமுக சார்பில் தடையை மீறி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். அதிமுக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் எம்பி அன்வர் ராஜா தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், முன்னாள் எம்பி நிறைகுளத்தான்,
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுந்தர பாண்டியன், ஆனி முத்து, முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயிலானி சீனிக் கட்டி, எம்ஜிஆர் மன்றம்
துணைச் செயலாளர்கள் ரத்தினம்,
மாணவரணி துணைச்செயலாளர் செந்தில் குமார்,
விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், துணைச் செயலாளர் அரவிந்த், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், மண்டபம் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் மருதுபாண்டியன், ஜானகி ராமன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா, மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால் போலீசார் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உட்பட 217 பேரை கைது செய்து மஹாலில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.