சின்னமனூர் 08:தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் 206 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையம் மற்றும் படிப்பு மையம் வ உ சி நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மேலும் அங்கு நடைபெறும் கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார் மேலும் ரூபாய் 2.86 கோடி மதிப்பீட்டில் நகராட்சி கழிவுகளை பையோ மைனிங் முறையில் சுத்தகரிப்பு செய்யும் முறையினை பார்வையிட்டு பையோ மைனிங் முறையில் குப்பைகளை உரமாக்குவதால் விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படும் குப்பையை உரமாக்கும் பணிகளை விரைவாக முடிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம் நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தேனி தெற்கு மாவட்ட திமுக பிரமுகர் இரா முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்