சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளைக்கு தமிழகத்தின் தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் நகைசுவை நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
சென்னை ரெட்கில்ஸில் உள்ள சிவசிவ அன்பேசிவம் குழு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை தன்னார்வ குழுவாக செய்து
வந்தனர். குழுவாக செயல்பட்டு வந்தநிலை அறக்கட்டளையாக செயல்பட முடிவு எடுத்து கடந்த 2024ம் ஆண்டு சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. அதன்படி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டியாக பாலகிருஷ்ணன், அதன் நிர்வாக உறுப்பினராக ரோகினி, டாக்டர் வனிதா சுப்புராயலு, டாக்டர் பிருந்தா, லோகேஷ், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சிவசிவ அன்பே சிவம் அறக்கட்டளை 119 நோக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது இதில் ஆன்மீகம், மருத்துவம், ஜோதிடம், யோகா, தியானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலவச முகாம்களை நடத்தி வருகிறது. சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவமுகாம், யோகா முகாம், ஆன்மிக கூட்டம் என சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை நடத்திய இலவச முகாம்களில் லட்சகணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
இத்தனை சாதனை படைத்த சிவசிவ அன்பே சிவம் அறக்கட்டளை சிறந்த சமூக சேவை அறம் விருதுக்கு தேர்வானது. அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில் நடந்த அறம் விருதுகள் 2025 விருது வழங்கும் விழாவில் சிவ சிவ அன்பே சிவம் குழுவினருக்கு தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விருதினை நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் மற்றும் நகைசுவை நடிகர் மதுரை முத்து ஆகியோர் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவன தலைவர் பாலகிருஷ்ணனுக்கு வழங்கி கவுரவித்தனர்.
இது குறித்து அறக்கட்டளை நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் கூறும்போது, விருதிற்காக நாங்கள் இதனை செய்யவில்லை. இருப்பினும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் மக்கள் பணியில் ஈடுபட்டத்தற்கு அங்கீகாரமாக இந்த விருதினை பெற்றுள்ளோம் என்றார்.