ராமநாதபுரம், மார்ச் 16-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமையில்,
மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் ஏற்பாட்டில் மண்டபம் மேற்கு ஒன்றியம் தேர்போகி கிராமத்தைச் சேர்ந்த
200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தாங்கள் சார்ந்த கட்சியில் இருந்து விடுவித்துக் கொண்டு ஆர்வத்தோடு அதிமுகவில் இணைந்தனர்.
ராமநாதபுரம் பாரதி நகர் தனியார் திருமணம் மஹாலில் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
இந்தியா மக்கள் கல்வி முன்னேற்ற கழக ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சூர்யா, ஓபிஎஸ் அணி ஒன்றிய தலைவர் பழனிக்குமார், பாஜக ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்ஜி ஆகியோர் தலைமையில் அதிமுக ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற துணை துணைச் செயலாளர் மலேசியா பாண்டியன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ரெத்தினம், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைசெயலாளர் நாட்டுக்கோட்டைஜெய கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் வினோத், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வம், தேர்போகி வடக்கு கிளை செயலாளர் கருங்கு, நல்லதம்பிவலசை கிளை செயலாளர் சரவணகுமார், பட்டணம்காத்தான் மேற்கு கிளை செயலாளர் நாகராஜன், கிருஷ்ணா நகர் கிளை செயலாளர் பஞ்சாட்சரம், ஆத்மநாதசாமி நகர் வடக்கு கிளை செயலாளர் தட்சிணாமூர்த்தி, அமிர்தா நகர் கிளை செயலாளர் கார்த்திகேயன், ரோஸ் நகர் கிளை செயலாளர் கண்ணன், ஒன்றிய இளைஞரணி விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் பேசும் போது, “2026 ல் மக்கள் பேர் ஆதரவுடன் எடப்பாடியார் முதலமைச்சர் ஆகப் பதவி ஏற்பது உறுதி.அதன் வெளிப்பாடு தான் தற்போது மக்கள் மத்தியில் அதிமுகவிற்கு அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இங்கு இணைந்துள்ள இளைஞர்களின் கூட்டம் தானாக சேர்ந்த மக்கள் ஆதரவு பெற்ற கூட்டம், இதுவே அதிமுகவின் வெற்றிக்கு சாட்சியாகவும்” என்று புகழ்பட பேசினார்.
மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறேன் தற்போது அதிமுகவில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது நன்கு மக்களுக்கு தெரிந்து விட்டது அதனால் உங்களைப் போன்ற இளைஞர்கள் இளம் பெண்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் உற்சாகத்துடன் அதிமுகவில் இணைந்து வருவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற சிறப்புமிக்க நிகழ்ச்சியை நடத்துவதில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் எப்போதும் தன்னலம் கருதாது முதல் நபராக கட்சிப் பணி ஆற்றி அனைவரின் பெரும் ஆதரவை பெற்று மக்களின் நல் ஆசியுடன் கட்சியை சிறப்பாக வளர்த்து வருகிறார் அவரது பணி பாராட்டுக்குரியது என்று பெருமைப்பட பேசினர்.
200 இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics