சங்கரன்கோவில். நவ.7.
சங்கரன்கோவில் நகராட்சி புதிய வணிக வளாகம் அருகில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர் உணர்வு திட்டத்தின் கீழ் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் இராஜகோபாலன் முன்னிலை வகித்தார். இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி, கைலாசம், வனவர்கள் மகாராஜன், சிவகாமிஅம்பாள், , மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.