குளச்சல் டிச 2
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், (பொறுப்பு) மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து காவல்ஆய்வாளர் சந்தண குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் குளச்சல், திங்கள்நகர் மற்றும் தோட்டியோடு பகுதியில் வார இறுதி நாள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேர் மற்றும் நான்கு பேர் பயணித்த 20 இருசக்கர வாகனங்களுக்கு 3000 முதல் 9000 ரூபாய் வரை அபராதம் விதித்தும், ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டிவரபட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில் இருசக்கர வாகனமானது இரண்டு நபர்கள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று நபர்கள் பயணிக்கும் போது வாகனத்தின் மொத்த எடையானது நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகரிக்கிறது இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. எனவே மூன்று நபர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரும் வாகன ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமத்தை,மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 C மற்றும் 194 D ன் படி மூன்று மாத காலம் வரை தகுதி நீக்கம் செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.