நாகர்கோவில் ஜூன் 23
நாகர்கோவில் இடலாக்குடி மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான். ஹோட்டலில் பணியாற்றி வந்தார்.இவர் நேற்று நள்ளிரவு வேலை முடிந்து நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார் நாகர்கோவில் நாகராஜா கோயில் சாலையில் இருந்து தபால் நிலைய சந்திப்பு பகுதியில் வந்து திரும்பும் போது, அந்த வழியாக வந்த வாகனம் இவர்களின் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த ரியாஸ்கான், டேனியல் ஆகிய இருவரும் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தனர்.அந்த வழியாக வாகனங்களில் சென்ற சிலர் விபத்து குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மருத் துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர் ஆனால் சிறிது நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.