தஞ்சாவூர் ஜூன் 21
தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரி கள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைக ள் வைத்திருந்த 10 கடைக்காரர்களு க்கு ரூபாய் 33,000 அபராதம் விதிக் கப்பட்டதோடு அவர்களிடமிருந்து 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளு க்கு ரூபாய் 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணி பைகள், காகித பைகள், சணல் பைகள், கண்ணாடி குவளைகள், உலோகத்தால் ஆன குவளைகள் பாக்கு மட்டை தட்டு, மர ஸ்பூன், மூங்கில் பிரஷ்,கரும்பு சக்கை தட்டு, கிழங்கு மாவு தட்டு போன்றவற்றை பயன்படுத்துமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு ள்ளது.
மேலும் வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப் பட்டால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதித்தும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவி க்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது துப்புரவு அலுவலர்கள் தங்கவேல் ரமேஷ் சீனிவாசன் ராமச்சந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பொன்னர், ஸ்டீபன், எபின் சுரேஷ் இருந்தனர்
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் மதுரை மார்க்கத்தில் பொது இடங்களில் சிறுநீர் கழித்த வர்களிடம் தலா ரூபாய் 100 வீதம் 5 நபர்களிடம் ரூபாய் 500 வசூலிக்கப் பட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக அலுவலகத்தில் கட்டப்பட்டது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சியால் தெரிவிக்க ப்பட்டுள்ளது.