சுசீந்திரம் ஜன 21
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை தெங்கம்புதூர் சாஸ்தா கோவில் குளம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த சாக்கு பையை பரிசோதனை செய்ததில் அதில் 50 மது பாட்டில்கள் எந்தவித அனுமதியின்றி விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்தது என தெரியவந்தது. உடனே அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தும், அரசு அனுமதியின்றி மதுவிற்ற கண்ணன் வயது 37 சாஸ்தா கோவில் அருகில் தெங்கம்புதூர், சரவணன் வயது 37 ,தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கண்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. உடனே இரண்டு பேரையும் கைது செய்து. வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.