கருங்கல், நவ- 23
குமரி மாவட்டம் நகார் கோவில் அருகே நயினாபுதூர் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (18). இவரது நண்பர் ஸ்ரீதர் (19) உட்பட சிலர் கருங்கல் பகுதி வெள்ளியாவிளையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது சிவப்பு டீ ஷர்ட் அணிந்த சப்ளையர் பரிமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே கலரில் டீ சர்ட் உடை அணிந்து வந்த சர்ஜின் என்பவரிடம் தவறுதலாக சாப்பாடு கேட்கவே, அவர் அங்கிருந்த கத்தியால் உதயசங்கரை குத்தி உள்ளார். தடுக்க முயன்ற ஸ்ரீதருக்கும் குத்து விழுந்தது. இருவரும் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.