மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2-ஆம் தொகுப்பைத் துவக்கி வைத்ததையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், அச்சுந்தன்வயல் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்
சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் .காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.