ஈரோடு செப் 26
ஈரோட்டை அடுத்த பெத்தாம்பாளையம் பேரூராட்சி பொன்னான்டாவலசு தேவாளிபாறை நெசவாளர்காலனியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் 750 மீ நீளத்திற்கு மண்சாலையினை தார்சாலையாக அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஈரோடு திங்களூர் மெயின்ரோடு கரிச்சிகாடு பிரிவிலிருந்து பொன்னான்டாவலசு மாரியம்மன்கோவில் உள்ள பழுதுபட்ட தார்சாலையினை ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணியினையும், மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.77.89 இலட்சம் மதிப்பீட்டில் காலனி பகுதியில் பழுதுபட்ட தார்சாலை புதுப்பித்தல் பணியினையும் அமைச்சரும் முத்துசாமி தொடங்கி வைத்தார்
மேலும் பெத்தாம்பாளையம் பேரூராட்சி கருக்கம்பாளையம் புதூர் பகுதியில் ரூ.36.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் பராமரிப்பு பணி மற்றும்முதல் தளத்தில் சமையல் அறை, உணவு உண்ணும் அறை அமைக்கும் பணியினையும், நல்லாம்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் வார சந்தையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினையும், என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பெத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
சார்பில் செங்கோடம்பாளையம் பகுதியில் 211 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும்
வகையில், பகுதிநேர நியாய விலைக்கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து
வைத்தார்.
முன்னதாக, பெருந்துறை சாலை, வாய்க்கால்மேடு நந்தா கல்லூரி அருகில் பனை
விதை நடும் விழாவினை துவக்கி வைத்து, பனை விதைகளை நட்டு வைத்தார். மேலும்,
பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் இரண்டாயிரமாவது மரக்கன்று நடும் பணியினை
துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ,
ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி
இயக்குநர் கணேசன் பெருந்துறை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பெரிய சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.