மதுரை
எஸ்ஆர்எம் மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்து பேசுகையில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் SRM MCET மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்து மாணவர்களிடயே பேசினார். அதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை TVS Supply Chain Solutions Limited இன் மனிதவளத் துறைத் தலைவர் S. அனந்தபத்மநாபன் பேசுகையில் மாணவர்கள் தனக்கென்று வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கைப்பற்றுதல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் அனைத்து துறைகளிலும் கல்வியில் சிறந்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் பதக்கங்கள் வழங்கி மகிழ்வித்து மற்றும்
கடந்த ஆண்டு 100% வருகைப் பதிவு செய்த மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் SRM MCET ஒருங்கிணைப்பாளர் எம்.மனோகரன் உட்பட கல்லூரி துறைத் தலைவர்கள், ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.