திண்டுக்கல் ஜூலை :30
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி நிகழ்ச்சி சாணார்பட்டி ரெங்கா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலரும், திமுக மாவட்ட பொருளாளருமான விஜயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத் துணைத் தலைவர் நாட்டாண்மை டாக்டர். என்.எம்.பி.காஜாமைதீன், ஜி.ஆர்.கே. கேட்டரிங் காலேஜ் மற்றும் பாரா மெடிக்கல் காலேஜ் தாளாளர் ஜி.ராதாகிருஷ்ணன், பரமசிவம், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் இணைச் செயலாளருமான எஸ். ஜோதிபாசு அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சர்மிளா தினேஷ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் எஸ். சார்வாகன் மாணவர்களுக்கான கியோருகி போட்டியை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட பிரதிநிதியும், எமக்கலாபுரம் ஊராட்சியின் தலைவருமான டாக்டர். எஸ். சுரேஷ் மாணவர்களுக்கான பூம்சே போட்டியை துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத்தின் சேர்மன் என். கமலஹாசன் மாணவிகளுக்கான கியோருகி போட்டியை துவக்கி வைத்தார். மாணவிகளுக்கான பூம்சே போட்டியை சாணார்பட்டி திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் ஜான்பீட்டர் துவக்கி வைத்தார். தேக்வாண்டோ போட்டியில் 11 வயதிற்கு கீழ் சப்-ஜூனியரில் 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 17 வயதிற்கு மேல் ஜூனியரில் 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பூம்சே, கியோருகி ஆகிய இரண்டு வகையான பிரிவுகளில் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனி, ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர், நத்தம், கொடைக்கானல் உட்பட 400 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் திருச்சியில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் கொசவப்பட்டி பிரின்ஸ் தேக்வாண்டோ கிளப் செயலாளரும், தேசிய நடுவருமான மாஸ்டர் வி.ஏ.ஏ. ஜெயசீலன் நன்றி கூறினார்.