ஊட்டி. ஜன. 20.
நீலகிரியில் பொங்கல் பண்டிகையில் களை கட்டிய மது விற்பனை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பணம் வழங்கப்படாத தாக்கம் அதிகமாக இருந்ததாக குடிமகன்கள் புலம்பித் தீர்த்தனர்.
தமிழ்நாட்டில் 4500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசின் முக்கிய வருவாய் பங்கீடாக டாஸ்மாக் தான் இருக்கிறது.
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.
இந்தாண்டு 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழ்நாட்டில் மொத்த டாஸ்மாக் வருமானம் 725 கோடி வசூலாகியுள்ளது.
இதனால் தேவையான அளவுக்கு மது பானங்கள் குவிக்கப்படும். எல்லா கடைகளிலும் இருப்பு அதிகளவில் வைக்கப்பட்டு சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்யப்படும்
குறிப்பாக பண்டிகை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை என்பது அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் நீலகிரியில் 1,96,99320
ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முந்தைய தினத்தில் மட்டும் இவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் தினம் அன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலானவர்கள் அதற்கு முதல் நாளே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர்.
14.01.2025 அன்று மட்டும்
மதுபான பாட்டில்கள் 1694
பீர் பாட்டில்கள் 566 மொத்தம்
19699320 ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகிஉள்ளது
பொதுவாக மலை மாவட்டத்தில் பொங்கல்நேரத்தில் மது விற்பனை களை கட்டுவது இல்லைபெரும்பாலான அரசு அலுவலர்கள் பொதுமக்கள் விடுமுறை என வெளிமாவட்டம் சென்று விடுவார்கள்
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பணம் வழங்கப்படாத தாக்கம் இந்த ஆண்டு நன்றாக தெரிந்தது
மேலும் ரூபாய் 2000 புழக்கத்தில் இருந்த போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட போது சில்லறை மாற்ற அனைவரும் மதுபான கடைகள் தேடி வந்த போது விற்பனை அமோகமாக இருந்தது என மது கடை நிர்வாகிகள் தெரிவித்தனர்.