கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் 185 ஆவது உலகப் புகைப்பட தினத்தையொட்டி தேனி மாவட்ட புகைப்பட வீடியோ ஒளிப்பதிவாளர்கள் விழாவாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட புகைப்பட வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க தலைவர் திருக்குமார் கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியில் ரத்ததானம் வழங்கினார். உடன் கம்பம் ஸ்டுடியோ உரிமையாளர்கள், மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.