நாகர்கோவில் – ஜூலை – 03,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024-25-ஆம் ஆண்டிற்கு அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் இராமபுரம் மற்றும் குலசேகரபுரம், கிள்ளியூர் வட்டாரத்தில் பாலூர், குருந்தன்கோடு வட்டாரத்தில் தலக்குளம் மற்றும் தென்கரை, மேல்புறம் வட்டாரத்தில் மருதன்கோடு மற்றும் மாஞ்சாலுமூடு, முஞ்சிறை வட்டாரத்தில் குளப்புரம் மற்றும் சூழல், இராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் கனியாகுளம், பள்ளம்துறை மற்றும் பறக்கை, திருவட்டார் வட்டாரத்தில் கண்ணனூர் மற்றும் சுருளக்கோடு, தோவாளை வட்டாரத்தில் இறச்சக்குளம், காட்டுப்புதூர் மற்றும் பீமநகரி, தக்கலை வட்டாரத்தில் ஆத்திவிளை ஆகிய 18 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் இனத்தின் கீழ் 3640 எண்கள் இலக்கு பெறப்பட்டு ரூ.5,46,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் 5 வகையான நெல்லி, கொய்யா, மா, சீத்தா, எலுமிச்சை போன்ற பழ மரக் கன்றுகள் அடங்கியத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு தொகுப்பு ரூ.200/- வீதம் 75% மானியத்தில் வழங்கப்படும். தொகுப்பு ஒன்றிற்கு 25% பயனாளியின் பங்கு தொகை ரூ.50/- ஆகும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு பழச்செடி தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல் இனத்தின் கீழ் 22 எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.1,65,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எக்டருக்கு 75% மானியமாக ரூ.7,500/- வீதம் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படும். ஒரு பயனாளி அதிக பட்சமாக இரண்டு எக்டர் வரை பயன்பெறலாம்.
பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் 22
எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.3,96,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எக்டருக்கு
50% மானியமாக ரூ.18,000/- வீதம் மா. கொய்யா, சப்போட்டா, ரம்புட்டான் மற்றும் மிளகு
போன்ற தோட்டக்கலை பயிர்களின் நடவு செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள்
வழங்கப்படும். ஒரு பயனாளி அதிக பட்சமாக நான்கு எக்டர் வரை பயன்பெறலாம்.
சிறு / குறு, பெண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும்
விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை
அணுகி பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர்,
கேட்டுக் கொள்கிறார்.