தருமபுரியில்
அனைத்திந்திய இளைஞர் பெருமனறத்தின் தமிழ்நாடு 18 – ஆவது மாநில மாநாடு, பேரணி தருமபுரியில் நடைபெற்றது .
தருமபுரி பாரதிபுரத்தில் துவங்கிய பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய செயலாளர் திருமலை அகில இந்திய பொதுச்செயலாளர் சுர்ஜித்சிங் மாநில செயலாளர் பாரதி, ஆகியோர் பங்கேற்றனர்.
இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் இலவச கல்வி வழங்க வேண்டும். வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். போதையில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பாஜக ஆர்எஸ்எஸ் பாசிசத்தை விரட்டியடிக்க வேண்டும். காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட் கோஷங்களை எழுப்பினர்.
தருமபுரி ஸ்டேட் வங்கி முன்பு கடந்த பேரணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தருமபுரி மாவட்டக் குழு சார்பில் பூதூவி வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம். அருள் குமார்
மாவட்ட தலைவர் குரளரசன் . பொருளாளர் சிலம்பரசன் நிர்வாகிகள் பி. கோவிந்தசாமி, குப்பன், அருன், ரவி, கிருஷ்ணவேணி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் உழவர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, எம். பி. மணி, திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டை யொட்டி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.