தஞ்சாவூர், டிச.23.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளி ன் 178-வது ஆராதனை விழாவுக் கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த மாதம் 14-ந் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு :-
ஜனவரி 14-ந் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை மங்கள இசை யுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து, தொடக்க விழா நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 15 மற்றும் 16-ந்தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. 17-ந்தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை தியாக பிரம்ம மகோத்சவ சபையின் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும்.
தொடர்ந்து காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடக்கும். 11 மணிக்கு மேல் திவ்ய நாமம் நடைபெறும். விழாவின் கடைசி நாளான 18-ந்தேதி காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை, 9 மணி முதல் 10 மணி வரை மகா அபிஷேகம், ஆராதனை, பஞ்சரத்ன கீர்த்தனை கள் கோஷ்டிக்கானம் நடைபெறும். தொடர்ந்து 10 மணி முதல் இரவு 11.20 மணி வரை இசை நிகழ்ச்சி கள் நடைபெறும். இரவு 7.30 மணி க்கு மல்லாரியுடன் சத்குரு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலம் நடைபெறும்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் மங்களம் நடைபெறும்.