ராமநாதபுரம், மே 23
ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 5 மாதங்களில் லஞ்சம் கேட்டு பெற்றதாக பல் வேறு துறைகளில் பணிபு
ரியும் உயர் அதிகாரிகள் 6 பேர், அலுவலர்கள் 7 பேர், லஞ்சம் வாங்க உறு துணையாக இருந்த இடைதரகர்கள் 3 பேர் என மொத்தம் 17 பேர் மீது 10 வழக்குகள் பதியப்பட்டு, ரசாயனம் தடவிய லஞ் சப்பணத்தை வாங்கும் போது கையும்,களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகார்களை கொடுத்த பொதுமக்களின் குறைகளை சம்மந் தப்பட்டதுறை அறிவுறுத்தி அடுத்த நாட்களில் சரி செய்து கொடுக்கப்பட் டது. அதன்படி முதல்வ
ரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண்களை வைத்திருந்த நபருக்கு ரூ.25 ஆயிரத்திற்கான பத்திரம், இதுபோன்று மின் வாரியம், வருவாய்துறை சார்ந்த கோரிக்கைகள் உரிய அலுவலர்கள் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், இடைத்தரகர் களுக்கு தங்களது கோரிக்கை நிறைவேற்றக்கோரி லஞ்சம், அன்புளிப்பு ஏதும் வழங்க வேண்டாம், அப்படி கேட்டால் புகார் தெரிவிக்க பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண் டிய மொபைல் எண்கள் டி.எஸ்.பி 94982 15697, இன்ஸ்பெக்டர்கள் 94981 88390, 96000 82798 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.