தென்காசி அக்:01
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாட்டில் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் பேட்டி.
தென்காசி மாவட்டம் நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16 வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் சுமதி தலைமையில் மாநிலச் செயலாளர் பிச்சைக்கனி மாவட்ட செயலாளர் கோவில் பிச்சை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிடவும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவில் பணிமூப்பு என்பதை ஒன்றிய அளவில் தளர்த்தி ஐந்தாண்டு பணி முடிந்த உதவியாளர் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கிடவும் ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூபாய் 6850 அகவிலை படியுடன் வழங்கிட வேண்டும் உயர்ந்து வரும் விலைவாசிக்கேற்ப மானியத் தொகையை குழந்தை ஒன்றுக்கு ரூபாய் பத்து ஆக உயர்த்திட வேண்டும் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கிடவும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்கிட வேண்டும் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் விருதுநகரில் நடைபெறும் மாநில மாநாட்டின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கங்களின் மாவட்ட மாநாட்டில் மாவட்ட முழுவதும் இருந்து திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்..