ராமநாதபுரம், ஏப்.7-
தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கின்ற தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை செலுத்தாத மத்திய அரசின் பிரதமர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவதை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறி தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ்
பொறுப்பு குழு உறுப்பினரும் ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட பொருளாளருமான பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் செல்லத்துரை அப்துல்லா, தெய்வேந்திரன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜோதிபாலன் ஆகியோர் முன்னிலையிலும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம கருமாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில செயலாளர் அடையாறு பாஸ்கரன், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர்,தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியன், மனோகரன், அன்வர் அலி நத்தர், செல்லச்சாமி, சேதுபாண்டியன், கந்தசாமி, நல்லமுகம்மது கனி, சுரேஷ்காந்தி, ராமர், புவனேஸ்வரன், ஆர்ட் கணேசன், சுப்பிரமணியன், நகர் தலைவர்கள் கோபி, அகமது கபீர், நூர் அலி, மகளிர் காங்கிரஸ் ராமலெட்சுமி உள்ளிட்ட சுமார் 160 க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 160 பேரை போலீசார் கைது செய்து தனியார் மஹாலில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.