ராமநாதபுரம் ஜன.27-
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ மாணவிகள் வாங்கும் மதிப்பெண் தங்களின் பெயர் போன்று மிகவும் முக்கியம் வாய்ந்தது. எனவே அனைவரும் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தங்கள் பெயரை நிலை நாட்ட வேண்டும் என்று முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவ மாணவிகள் மத்தியில் பேசினார்.
ராமநாதபுரம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 15-ம் ஆண்டு விளையாட்டுவிழா ஒலிம்பியா -2025 நிகழ்ச்சி
கல்வி நிறுவனங்கள் சேர்மன் கதிரேசன் பள்ளி தாளாளர் டாக்டர் வி.கே.ராஜீவ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை நிர்வாகிகள் பொறியாளர் மணிகன்டன், பொறியாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் பரிமலா அந்தோணி அனைவரையும். வரவேற்றார்.
காவல் துறை முன்னாள் டிஜிபி சைலேந்தி பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடம்
கலந்துரையாடல் செய்து மாணவ மாணவிகளிடம் பேசி அவர்களிடம் உள்ள தனி திறமையை அச்சமின்றி எவ்வாறு வெளி கொண்டு வருவது என்பது குறித்து உற்சாகமாக கலந்துரையாடல் செய்தார். மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு கல்வி இரண்டும் இரண்டு கண்களைப் போன்றது இரண்டும் மிகவும் முக்கியம் என்பதை மாணவ மாணவிகள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் அவர்களோடு கலந்துரையாடி அவர்களிடம் கேள்விகளை கேட்டு அதற்கு உடனடியாக பதில் அளித்த மாணவ மாணவிகளுக்கு அதே இடத்தில் புத்தகத்தை பரிசாக வழங்கி ஊக்குவித்தார்.
மாணவ மாணவிகள் என்றும் தங்கள் பெற்றோருக்கு ஒரு சிறந்த பரிசு வழங்க வேண்டும் என்றால் அது பெற்றோரின் முகத்தில் புன்முறுவல் வர வேண்டும். அதற்கு ஒரே வழி மாணவர்கள் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிய வேண்டும். உங்கள் சாதனை உங்கள் பெற்றோருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் அளவற்ற சந்தோஷத்தையும் வழங்கும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் என்பது ஒவ்வொரு மாணவனின் பெயர் போல் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மதிப்பெண் என்பதால் ஒவ்வொரு மாணவரும் குறிக்கோள் வைத்து அதிகமான மதிப்பெண் பெற்று உங்கள் பெயரை முத்திரை பதிக்க வேண்டும் அதுதான் உங்களுக்கும் உங்கள் பள்ளிக்கும் உங்கள் பெற்றோருக்கும் ஏன் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் பெருமைமிக்கதாகும். எனவே பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு என்ற இலக்கோடு தேர்வு எழுத வேண்டும், என்று மாணவிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசி அவர்களை கல்வி மற்றும் விளையாட்டில் மென்மேலும் சிறக்க வழிமுறைகளை எடுத்துக் கூறினார். அத்துடன்
அறிவுத்திறன் போட்டியில் வெற்றிபெற ஆலோசனைகளை வழங்கினார். சுமார் இரண்டு மணி நேரம் மாணவ மாணவியரிடம் முன்னாள் டிஜிபி கலந்துரையாடல் செய்தது மாணவ மாணவிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும் அவரது கேள்விக்கு போட்டி போட்டுக் கொண்டு பதில் கூறி அடுத்தடுத்து மாணவ மாணவிகள் புத்தகங்களை பரிசாக (புத்தகத்தில் அவரது கையொப்பமிட்டு) பெற்று சென்று மகிழ்ந்தனர்.
விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் வானவில் நிகழ்ச்சி விவசாயிகள் போன்று வேடமிட்டும், மலைவாழ் மக்கள் வேடமிட்டும் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு. முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக விளையாட்டு மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளின் இசையை நிகழ்ச்சி, கராத்தே, ஸ்கேட்டிங், சிலம்பம் போன்ற பல்வேறு திறமைகளை மாணவ மாணவிகள் வெளிப்படுத்தினர். பள்ளி வளாகத்தில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ரைபிள் கிளப் திறந்து வைத்து மாணவ மாணவிகள் துப்பாக்கி சூடுவதில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆலோசனை வழங்கினார். இறுதியாக பள்ளி ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகளின் லீடர் விகாசினி நன்றி கூறினார்.