ஈரோடு மே 30
தற்போது மாம்பழம் சீசன் என்பதால் மார்க்கெட்டுகளில் மாம்பழ விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த மாம்பழங்களை சில கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன இதையொட்டி அவர்கள் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் திடீரென்று ஆய்வு செய்து வருகின்றனர்
அப்போது ரசாயணம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் மட்டும் கடைகள் குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன இதில் 16 கடைகளில் ரசாயனம் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 158 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது இது குறித்து 16 கடைகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு ரூ 16,000 அபராதம் விதிக்கப்பட்டது மேலும் ரசாயனம் கலப்பு அழுகிய பழங்கள் என 53 கிலோ தர்பூசணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது