கன்னியாகுமரி, அக்.27-
கன்னியாகுமரியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி கம்பத்தில் மீண்டும் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் ரவுண்டானாவில் தென் தமிழகத்திலேயே உயரமான தேசிய கொடி கடந்த 2022 செப்டம்பர் மாதம் நிறுவப்பட்டது. ஆனால் இப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக சில தினங்களிலேயே கொடி சேதமடைந்து விட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்படாததால் , இப்பகுதி பொதுமக்கள் அரசிற்கு வேண்டிகோள் விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று கொடியேற்றப்பட்டது. இந்த கொடி தென் தமிழகத்திலேயே மிக உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தும், கொடிக்கு மரியாதை செலுத்தியும் செல்கின்றனர்.