பிப்:11
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 14வது தேசிய அளவில் தற்காப்பு திருவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் டேக்வாண்டோ, கராத்தே,சிலம்பம் போன்றவற்றை குருசரவணா முத்து, மாஸ்டர்கள் ரகுராம், குமார், சதிஷ், மணிகண்டபிரபு ஆகியோர் போட்டியின் ஏற்பாடுக்களை செய்தனர்.
இதில் வெற்றி பெற்றவருக்கு தலைவர் சண்முகசுந்தரம், பெருமாநல்லூர் உதவிகாவல் ஆய்வாளர் கலாமணி,மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் இப்ராகிம்பாதுஷா, மற்றும் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு சான்றிதழும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.