மதுரை ஜூலை 24,
மதுரை, பெங்களூரில் 13வது சப்-ஜீனியர் மற்றும் ஜீனியர் பாரா தடகள சாம்பியனி்ப் போட்டி 2024 நடைபெற்றது இப்போட்டியில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனை ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் இராஜா, மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்றுனர்கள் ஜெ.ரஞ்சித்குமார், தீபா ஆகியோர் உடன் உள்ளனர்.